• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- 6,960.95 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் களனிய, வயம்ப, றுகுணு, மொறட்டுவை, ரஜரட்டை, கொழும்பு, இலங்கை பிக்குகள், பேராதனை, சப்பிரகமுவ, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிக்கும் பொருட்டு 13 கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக போட்டிக் கேள்வி நடவடிக்கை முறையைப் பின்பற்றி ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்கும் இதன்சார்பில் 2017 - 2022 நடுத்தவணைக்கால வரவு செலவுத்திட்ட கட்டமைப்பின் கீழ் நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்வதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.