• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலையக புகையிரத சேவையின் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களை கொள்வனவு செய்தல்
- மலையக புகையிரத சேவையின் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சர வையினால் 2015-12‑16 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக திறந்த போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு 4 விலைமுன்வைப்புகளைச் செய்த கேள்விதாரர்களிலிருந்து அனுசரனையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரரான M/s Dongfong Electric International நிறுவனத்துக்கு அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 09 டீசல் மல்டிபல் யுனிட்டுக்களை வழங்கும் ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.