• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு TESLA MAGNETIC RESONANCE IMAGING ஸ்கேனர் இயந்திரமொன்றை பெற்றுக் கொள்ளல்
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு TESLA MAGNETIC RESONANCE IMAGING ஸ்கேனர் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச போட்டிகரமான விலை கோரப்பட்டுள்ளதோடு, மூன்று விலை முன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விலை முன் வைப்புகளை மதிப்பிட்டு அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 251.78 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s.Technomedics International (Pvt) Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.