• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை, மட்டக்களப்பு அஞ்சல் கட்டடத்தொகுதிகளையும் அஞ்சல் கட்டடத் தொகுதி, பூஜாபிட்டிய அஞ்சல் அலுவலகத்தையும் நிருமாணித்தல்
- பொலன்நறுவை புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அஞ்சல் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் உட்பட கட்டடங்கள் சில நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடமையாக்கி கொள்ளப்படவுள்ளதோடு, இதன் சார்பில் கதுறுவெல நகரத்தில் புதிய அஞ்சல் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ள மட்டக்களப்பு அஞ்சல் அலுவலக கட்டடத் தொகுதி சார்பில் 6 மாடிகளைக் கொண்ட சகல வசதிகளுடனும் கூடிய புத்தம் புதிய கட்டடமொன்று நிருமாணிக்கப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. மேலும் கண்டி மாவட்டத்தின் பூஜாபிட்டிய அஞ்சல் அலுவலகத்தின் மூலம் சுமார் 30 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்ட பிரதேசத்தில் பொதுமக்களுக்கான கடிதங்களை பகிர்ந்தளிக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றதோடு, இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்குத் தேவையான தொடக்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக பொலன்நறுவை, மட்டக்களப்பு அஞ்சல் கட்டடத் தொகுதிகளுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளையும் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பூஜாபிட்டிய அஞ்சல் அலுவலக நிருமாணிப்புக்குத் தேவையான மிகுதி நிதி ஏற்பாடுகளையும் பொதுத் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.