• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இருதய - நெஞ்சறை சிகிச்சை மற்றும் தீவிர பராமரிப்பு சிகிச்சை சேவை சார்பில் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை இருதய நோய்களுடனான குழந்தைகளுக்கு விரிவான சிகிச்சை சேவைகளை வழங்கும் ஆற்றலுள்ள ஒரே வைத்தியசாலையாகும் என்பதோடு, இங்கு செய்யப்படும் இருதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேவையான வளங்களை வழங்குவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நவீன வசதிகளுடன் கூடிய 4 சத்திர சிகிச்சைக் கூடங்கள், 14 படுக்கைகளைக் கொண்ட தீவர சிகிச்சை பிரிவு, 33 படுக்கைகைளைக் கொண்ட மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவு, 50 படுக்கைகளைக் கொண்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகள் விசேட சிகிச்சை சேவை உட்பட ஏனைய தேவையான வசதிகளைக் கொண்ட 10 மாடிகளுடனான புதிய கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டிற்கு அமைவாக கருத்திட்டத்தின் செலவினை 2,439.7 மில்லியன் ரூபாவாக திருத்துவதற்கும் இந்த செலவினை திரட்டிய நிதியத்திலிருந்தும் இலங்கை சிறுவர் நிபுணத்துவ மருத்துவர்களின் நிறுவனத்தினால் "Little Hearts” என்னும் பெயரில் திரட்டியுள்ள நிதியத்திலிருந்தும் தழுவுவதற்கும் இதன் நிருமாணிப்புப் பணிகளை இரண்டு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்வதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.