• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டில் மூலதன பாதீட்டினூடாக நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை
- 2016 ஆம் ஆண்டினுள் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நிதியத்தின் கீழ் அந்தந்த அமைச்சுக்களினாலும் அதன் கீழுள்ள நிறுவனங்களினாலும் நடைமுறைப் படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் சம்பந்தமாக முன்னேற்ற அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவையினால் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி 2016 ஆம் ஆண்டில் 10 வரிசை அமைச்சுக்கள் இந்த அமைச்சுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூலதன நிதி ஏற்பாடுகளிலிருந்து 80 சதவீதத்திற்கும் கூடுதலாக பயன்படுத்தியுள்ளன. 21 அமைச்சுக்கள் 60 சதவீதத்திற்கும் 80 சதவீதத்திற்கும் இடையில் மூலதன நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தும் முன்னேற்றத்தினை பெற்றுக்கொண்டுள்ளன எனவும் 2016 ஆம் ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் மொத்த பயன்பாடு 62.3 சதவீதமாகும் எனவும் கடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.