• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்சக்தியில் ஓடும் வாகனங்களை செறிவூட்டும் நிலையங்களின் ஒழுங்குறுத்துகை
- மின்சக்தியில் ஓடும் மோட்டார் வாகனங்கள் இலங்கையில் பிரபல்யமாகும் போக்கினை காட்டுகின்றது. 2014 ஆம் ஆண்டில் 90 ஆக இருந்த மின்சக்தியில் ஓடும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 4,000 வரை அதிகரித்துள்ளது. இந்த மோட்டார் வாகனங்களை செறிவூட்டுவதற்கான 50 நிலையங்கள் பிரதான நகரங்களை மையமாகக் கொண்டு நாட்டினுள் இயங்குகின்றது. இந்த மின்சக்தியில் ஓடும் வாகனங்களின் பற்றறிகளை செறிவூட்டும் நிலையங்களில் மின்சாரம் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் இந்த பணிகளை ஒழுங்குறுத்துவதற்கான ஏற்பாடுகள் 2009 ஆம் ஆண்டில் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை.

இதற்கமைவாக, மின்சக்தியில் ஓடும் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், செறிவூட்டல் கட்டணம், பாதுகாப்புத் தரங்கள், அளவிடல் உபகரணங்களின் செம்மை, நுகர்வோர் முறைப்பாடு உட்பட பிணக்குகளை தீர்ப்பதற்கு தலையிடுதல் போன்ற விடயங்களின்பால் கவனம் செலுத்தி, உரிய ஏற்பாடுகளை உள்ளடக்கி குறித்த சட்டத்தை திருத்துவதற்கும் அதுவரை மின்சக்தியால் ஓடும் மோட்டார் வாகனங்களை செறிவூட்டும் நிலையங்களின் பணிகள் சம்பந்தமாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.