• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார ரீதியிலான பெறுபேறுகளை அடையும் நிகழ்ச்சித் திட்டம் சார்பில் அதற்கான நோக்கங்கள் உட்பட முன்னுரிமைகளை விதித்துரைத்தல்
- இலங்கையில் துரித பொருளாதார மாற்றமொன்றை உருவாக்கும் நோக்கில் அமைச்சரவையினால் மத்திய நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவ அலகொன்றைத் தாபிப்பதற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 வருட காலப்பகுதிக்குள் இலங்கைக்கு மிக முக்கியமான பொருளாதார பெறுபேற்றினை பெற்றுக் கொடுப்பதனை துரிதப்படுத்துவதன்பால் விசேட கவனம் செலுத்தி எய்தப்பட வேண்டிய பெறுபேறுகளையும் முன்னுரிமைகளையும் வரிசைப்படுத்தி மத்திய நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவ அலகொன்றைத் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கட்டாய குறியிலக்கினைக் கொண்டு செயற்படுத்தப்படும் இந்த பொருளாதார ரீதியிலான பெறுபேறுகளை அடையும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பின்வரும் முன்னுரிமைத் துறைகள் ஐந்தில் வளர்ச்சியினை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

i. பொதுமக்கள் பெறும் வருமானம்
ii. தனியார் துறை தொழில் வாய்ப்பு
iii. உள்நாட்டு, வௌிநாட்டு முதலீடுகள்
iv. ஏற்றுமதி
v அரசாங்கத்தின் வருமானம்

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் பெறுபேற்றினை அடைவதற்கு சுற்றுலாத் தொழில், கமத்தொழில் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளாவன நேரடி தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய துறைகளாக இனங்காணப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு பக்கபலமான துறையாக முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரம், அரசாங்க வருமானம் ஆகிய துறைகளும்கூட இனங்காணப்பட்டுள்ளன. இந்த குறியிலக்கு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உரிய அமைச்சர்களின் தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கும் மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினாலும் இரண்டு வாரங்களுக்கொரு தடவை அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக திட்டவட்டமான குறியிலக்கின் கீழ் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.