• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அலிகொட்டஆர நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட வெல்லவாய கொட்டிகம்பொக்க பளிங்கு படிகங்களை அகழ்தல்
- வெல்லவாய, கொட்டிகம்பொக்க பிரதேசத்தில் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான வனப்பகுதியிலுள்ள பளிங்கு படிகங்கள் அளவில் அண்ணளவாக 910,000 கியூபிக் மீட்டர்கள் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. உமா ஓயா பல்பணி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்டுவரும் அலிகொட்டஆர நீர்த்தேக்கத்திற்கு எல்லையில் இது இருப்பதன் காரணமாக, 2018 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த நீர்த்தேக்கத்திற்கு உரிய முறையில் நீர் நிரப்பப்பட்டதும் இந்த கனியப் படிகத்தை உரிய முறையில் அகழ முடியாமல் போகும். ஆதலால் இதற்கு முன்னர் இந்த பளிங்கு படிகத்தை விஞ்ஞான ரீதியில் அகழ்ந்து, பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு கனிசமான அளவு பங்களிப்பினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முறையான சாத்தியத் தகவு ஆய்வொன்றை செய்வதற்கும் அதன் பெறுபேற்றின் மீது திறந்த கேள்வி நடவடிக்கை முறையைப் பின்பற்றி உள்நாட்டு வௌிநாட்டு நிறுவனங் களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோரி இந்த பளிங்குப் படிகங்களை அகழ்ந்து பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதற்கு பொருத்தமான நிறுவனமொன்றை தெரிவு செய்வதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.