• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அந்நிய செலாவணிச் சட்டமூலம்
- அந்நிய செலாவணியை நடைமுறை தேவைகளுக்கு ஏற்றவாறு முகாமிப்பதற்கும் ஒழுங்குறுத்துவதற்கும் இலங்கை பிரசைகளிடத்தில் இலங்கைக்கு வௌியேயுள்ள அந்நிய செலாவணியை இந்நாட்டிற்கு அனுப்புவதற்கு அவர்களை ஊக்குவிப்பதற்கும், தற்போதைய நிலைமைக்கு பொருந்தாத அந்நிய செலாவணி பரிமாற்றல் கட்டுப்பாட்டுச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்குமான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு சட்டவரைநரினால் வரையப்பட்டு சட்டமா அதிபரினால் இசைவாக்கம் வழங்கப்பட்டுள்ள "அந்நிய செலாவணிச் சட்டமூலத்தை" அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.