• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டான தேசிய பொலிஸ் கல்லூரியின் விடுதிக் கட்டத்தையும் நிருவாகக் கட்டடத்தையும் நிருமாணித்தல்
- பொலிஸ் உத்தியோ கத்தர்களின் அறிவு, எண்ணம் மற்றும் ஆற்றல் அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட "கட்டான, பொலிஸ் பயிற்சிக் கல்லூரி" 2009 ஆம் ஆண்டில் "கட்டான தேசிய பொலிஸ் கல்விக் கல்லூரியாக" மாற்றப்பட்டது. 39 ஏக்கர்களைக் கொண்ட நிலப்பிரதேத்தில் அமைந்துள்ள இந்த கல்விக் கல்லூரி சருவதேச பொலிஸ் கல்விக் கல்லூரிக்கு ஏற்ற விதத்தில் அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகும். இதற்கமைவாக, 450 உத்தியோகத்தர்களை ஒரே தடவையில் பயிற்றுவிப்பதற்குத் தேவையான தங்குமிட வசதிகள், நிருவாக பணிகள், விரிவுரை மண்டபங்கள், நூலக வசதிகள், நலனோம்பல் பணிகள் உட்பட களியாட்ட வசதிகள் இந்த கல்விக் கல்லூரியில் தாபிக்கப்படுவது அத்தியாவசியமானதாகும். இந்த அபிவிருத்தி செயற்பாட்டின் ஆரம்ப நடவடிக் கையாக 2017 - 2019 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் 674.26 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட மொத்த ஆகு செலவில் "கட்டான தேசிய பொலிஸ் கல்விக் கல்லூரியின் விடுதிக் கட்டத்தையும் நிருவாகக் கட்டடத்தையும் நிருமாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.