• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆயுள்வேத மருத்துவமனைகளை நிருமாணித்தலும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலும்
- உள்நாட்டு மருத்துவ முறையின் மேம்பாட்டுக்கு அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதன் கீழ் யக்கல ஆயுள்வேத மருத்துவமனை சார்பில் பத்து மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல், திருகோணமலை மாவட்டத்தின் கோணேசபுரியில் சித்த மருத்துவ போதனா வைத்தியசாலையொன்றை நிருமாணித்தல், மட்டக்களப்பு மாவட்டத்தின் மஞ்சந்தொடுவாய் ஆயுள்வேத மருத்துவமனை சார்பில் காவறை தொகுதியொன்றை நிருமாணித்தல், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கைதடி ஆயுள்வேத வைத்தியசாலை சார்பில் இரண்டு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல் என்பனவற்றுக்கு அமைச்சரவையினால் 2014 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள "வெதகம" என்னும் கிராமத்தில் பாராம்பரிய ஆயுள்வேத மருத்துவமனை யொன்றை நிருமாணிப்பதற்கும் 2016‑07‑13 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட காரணங்களினால் தற்போது தாமதமடைந்துள்ள இந்த கருத்திட்டங்களை துரிதமாக ஆரம்பித்து, ஆகக்குறைந்த செலவிலும் உயர் தரத்திலும் மிகப் பயனுள்ள வகையில் பணியினை பூர்த்தி செய்வதற்காக இந்த கருத்திட்டங்களுக்குரிய மதியுரைச் சேவைகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் இந்த கருத்திட்டங்களின் நிருமாணிப்பு பணிகளை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கையளித்து நிருமாணிப்புப் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.