• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தலசீமியா நோயாளர்களுக்கான எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சைப் பிரிவொன்றை கண்டி போதனா வைத்தியசாலையில் தாபித்தல்
- இலங்கை முழுவதும் 3,500 மேற்பட்ட தலசீமியா நோயாளிகளும் தலசீமியா நோய் காவிகளாக சுமார் 500,000 பேர்களும் உள்ளார்களென இனங்காணப்பட்டுள்ளது. எலும்பு மச்சை மூலம் செய்யப்படும் கலங்களுக்கான சிகிச்சை மற்றும் தொப்புள் சார்ந்த குருதி மாற்றம் இந்த நோய்க்கான நிரந்தர சிகிச்சையொன்றாக உலகின் பெரும்பாலான நாடுகளினால் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இதற்கான வசதிகள் இலங்கையிலுள்ள அரசாங்கா மருத்துவமனைகளில் தற்போது கிடைக்கக் கூடியதாக இல்லை. ஆதலால், தலசீமியா நோயாளிகளுக்கான எலும்பு மச்சை மாற்று சிகிச்சை பிரிவொன்றை இலங்கையில் தாபிக்கும் தேவை எழுந்துள்ளது. இலங்கையில் பெரும்பாலன தலசீமியா நோயாளர்கள் குருநாகல், கொழும்பு, கம்பஹா, அநுராதபுரம், பதுளை, அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளமையினால், குறித்த எலும்பு மச்சை மாற்று சிகிச்சைப் பிரிவை கண்டி போதனா வைத்தியசாலையில் தாபிப்பது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தலசீமியா நோயாளர்களுக்கான எலும்பு மச்சை மாற்று சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத் தொகுதியை கண்டி பேதனா வைத்தியாசலையில் வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் 856.9 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியுடனான தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணிகயத்திற்கும் Central Engineering Services (Pvt) Ltd., நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.