• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒருகொடவத்த - அம்பத்தலே வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக நீர்குழாய் வழியை விருத்தி செய்தல்
- ஒஸ்ரியாவின் Uni Credit Bank AG மற்றும் மக்கள் வங்கி ஊடாக நிதியளிக்கப்படும் இந்த கருத்திட்டத்தின் பிரதான நோக்கமாவது தற்போதுள்ள ஒருகொடவத்த - அம்பத்தலே வீதி பகுதிக்கு ஒருங்கிணைவாக பதிக்கப்பட்டுள்ள நீர் பயன்பாட்டு குழாய் வழியை ஒருகொடவத்த - அம்பத்தலே வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வீதிக்கு ஒருங்கிணைவாக புதிதாக பதிக்கப்படுதலாகும். பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான கம்பனியொன்றை தெரிவு செய்யும் பொருட்டு மூன்று கம்பனிகளிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டிருந்த போதிலும் அதற்கான அனுசரணை தெரிவித்துள்ளது Mascinen - Umwelttechink - Transport Anlagen (M-U-T) கம்பனி மாத்திரமாகும். இதற்கமைவாக, இந்த கம்பனியுடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்தி கொள்வனவு செயற்பாட்டினை துரிதப்படுத்துவதற்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் நிமனஞ் செய்யப்பட்ட அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த கருத்திட்டத்திற்குரிய ஒப்பந்தத்தை 46.21 மில்லியன் யூரோக்கள் கொண்ட மொத்த தொகைக்கு Mascinen - Umwelttechink - Transport Anlagen (M-U-T) கம்பனிக்கு வழங்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.