• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புக் கருத்திட்டத்தின் 3 ஆம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புக் கருத்திட்டத்தின் 3 ஆம் கட்டத்தின் கீழ் 74 கிலோ மீற்றர் நீளம் கொண்ட மினிப்பே இடதுகரை கால்வாயின் 49.82 கிலோ மீற்றரிலிருந்து 63.65 கிலோ மீற்றர் வரையான பிரதேசத்தை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், 625.73 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு (வற் வரியின்றி) அனுசரணையான ஆகக்குறைந்த மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரரான Nawaloka Construction (Pvt) Ltd., கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.