• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் துணைக் கம்பனியொன்றான Human Capital Solutions (Pvt.) Ltd., கம்பனியின் ஊழியர்கள் சம்பந்தமாக உருவாகியுள்ள பிணக்கினை தீர்ப்பதற்கான பிரேரிப்பு
- இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் துணைக் கம்பனியொன்றான Human Capital Solutions (Pvt.) Ltd., கம்பனி இலங்கை ரெலிகொம் நிறுவனம் உட்பட வௌிவாரி நிறுவனங்களுக்கு மனித வளத்தினை வழங்குவதற்காக தாபிக்கப்பட்ட நிறுவனமொன்றாவதோடு, அதன் மொத்தப் பதவியணி 2,650 பேர்களாவர். இவர்களுள் 2,180 பேர்கள் இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கு இணைக்கப்பட்ட ஊழியர்களாவதோடு, அவர்கள் அனைவரும் HCS நிறுவனத்தின் ஊழியர்களாக தொழில் ஒப்பந்தத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு இந்த நிறுவனத்திடமிருந்து சம்பளம் உட்பட ஏனைய வசதிகளை பெறும் ஊழியர்களாவர். அவர்களுள் 1,331 பேர்களின் சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு, வருடாந்த மிகையூதியம் என்பற்றுடன் மாதாந்தம் 30,000/- ரூபாவிலிருந்து 100,000/- ரூபா வரை சம்பளம் பெறுவதோடு, வருடாந்த மிகையூதிய தொகைக்கு மேலதிகமாக சம்பள அதிகரிப்பு மற்றும் காப்புறுதி உட்பட ஏனைய வசதிகளையும் பெற்று வருகின்றனர்.

இந்த ஊழியர்களுள் ஒரு பகுதியினரின் தொழில்சார்ந்த அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாவது அவர்களை இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் ஊழி்யர்களாக கருதி இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கு உள்ளீர்க்குமாறாகும். இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நுகர்வோர் சம்பந்தமான பணிகள் கணனிமயப்படுத்தப்பட்டதன் பின்னர், மேலதிக ஊழியர்கள் கணிசமானோர் இருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்களின் கோரிக்கையின் பிரகாரம் அவர்களை இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கு உள்ளீர்த்தால் இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கு 1.6 பில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக செலவினை ஏற்கவேண்டி வரும்.

ஆயினும், எழுந்துள்ள நிலைமை சம்பந்தமாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கருணை அடிப்படையில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுவரை நான்கு (04) கட்டங்களின் கீழ் HCS நிறுவனத்தின் அனுபவம் மிக்க தொழில் தகைமை கொண்ட ஊழியர்களை இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கு உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.