• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப சட்டத்தை திருத்துதல்
- 2008 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க திருத்த சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப சட்டத்தின் ஊடாக இலங்கையின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பக் கொள்கைகள் சார்பிலான சட்டக் கட்டமைப்பு தாபிக்கப்பட்டுள்ளது. தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்பத்தை பயன்படுத்தி பொது மக்களுக்கு வினைத்திறன்மிக்க அரசாங்க சேவையொன்றை வழங்குவதற்கு பிரசைகளின் ஆயளவைத் தகவல் அடங்கலாக பொதுவான தரவுகளை களஞ்சியப்படுத்தக் கூடிய அத்துடன் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் இந்த தரவுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய "தேசிய டிஜிட்டல் அடையாளம் காட்டுதல் “(National Digital Identifier - NDI) மற்றும் தேசிய டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் (National Digital Transaction - NDI) தளமொன்றிற்காக தாபிக்கும் எண்ணத்துடன் குடும்பங்களுக்கு செய்யப்படும் மாற்றீடு பற்றிய முகாமைத்துவக் கருத்திட்ட மொன்றை (Centralized Household Transfer Management Project) நடைமுறைப் படுத்துவதற்கு வசதிகளை வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மைக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. மேற்போந்த கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தை கவனத்திற் கொள்ளும் போது தனிப்பட்ட தகவல்கள் அடங்கலாக தரவுகளின் பாதுகாப்பினை உறுதிசெய்வது அத்தியாவசியமானதென அவதானிக்கப்பட்டுள்ளமையினால் பிரசைகளின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்தல், களஞ்சியப்படுத்தல், பகிர்ந்து கொள்ளல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பிலான தேசிய கொள்கையொன்று தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப முகவராண்மையினால் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்பம் தொடர்பிலான திறமுறைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை முறையாகவும் பயனுள்ள விதத்திலும் நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிறுவன ரீதியிலான ஏற்பாடுகள், கட்டுப்பாடு உட்பட செயற்பாட்டு நடவடிக்கைகளை தாபிக்கும் பொருட்டு 2003 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க தகவல், தொலைத்தொடர்பாடல் தொழினுட்ப சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சர்கள் குழுவுக்கு இயலுமாகும் வகையில் இந்தச் சட்டத்திற்கு செய்யப்பட வேண்டிய தேவையான திருத்தங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுக்கும் பொருட்டு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.