• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட கட்டளைகள் உள்ளடக்கப்பட்ட 2016‑10‑27 ஆம் திகதியிடப்பட்டதும் 1990/23 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் தேசிய விளையாட்டு சங்கங்கள் கட்டளைகளைத் திருத்தி வரையப்பட்ட கட்டளைகள் உள்ளடக்கப்பட்ட 2017‑02‑13 ஆம் திகதியிடப்பட்டதும் 2006/13 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.