• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பாலங்கள் கருத்திட்டம் - கட்டம் II - 63 மேலதிகப் பாலங்களை நிருமாணித்தல்
- 537 கிராமிய பாலங்களை நிருமாணிக்கும் கருத்திட்டத்திற்கு 100 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் கடன்தொகையொன்றைப் Deutsche Bank AG London வங்கியிடமிருந்து வர்த்தக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கு 2014 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 03 வருடங்கள் கொண்ட இந்த கருத்திட்ட கால எல்லையானது 2017 திசெம்பர் மாதம் 08 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதோடு, நாணயமாற்று விகிதாசார மாற்றம் காரணமாக உரிய கடன் வசதியின் கீழ் மேலதிகமாக நிதி உள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கமைவாக, குறித்த மீதித் தொகையைப் பயன்படுத்தி 63 மேலதிகப் பாலங்களை நிருமாணிப்பதற்கும் இதற்காக இந்தக் கருத்திட்டத்தின் காலஎல்லையை 2017 திசெம்பர் மாதம் 08 ஆம் திகதியிலிருந்து மேலும் மூன்று (03) மாத காலத்தால் நீடிப்பதற்குமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.