• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலகுரக புகையிரத போக்குவரத்து பாதைகளை நிருமாணிக்கும் கருத்திட்டத்தினை நடைமுறைபடுத்துவதற்காக கருத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றைத் தாபித்தல்
- யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையின் (JICA) அனுசரணையில் தாபிக்கப்படவுள்ள கொழும்பு கோட்டையிலிருந்து பம்பலப்பிட்டிய, பொரளை ஊடாக மருதானை வரை செல்லும் உத்தேச இலகுரக புகையிரத போக்குவரத்து பாதை மற்றும் பொரளையிலிருந்து மாலம்பே வரை செல்லும் உத்தேச இலகுரக புகையிரத பாதை தொடர்பில் சாத்திய தகவாய்வொன்றை செய்தல், இந்த பாதை முறைமையை நிருமாணித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்பனவற்றுக்காக கருத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை தாபிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.