• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய இலங்கை குடிவரவு, குடியகல்வு சட்டத்தை வரைதல்
--1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டம் 1955, 1961, 1993, 1998, 2006 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிலசில திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும், இதனை தற்போதைய உலகளாவிய நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது அத்தியாவசியமானதாகும். சட்ட விரோத புலம்பெயர்வு, மனித வியாபாரம், பயங்கரவாதம், நாட்டு எல்லைக்கு அப்பால் நிகழும் குற்றங்கள், புலம்பெயர் சுகாதாரம் போன்ற உட்சிக்கல் வாய்ந்த சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு நடைமுறையிலுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்திலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு பலம்மிக்க குடிவரவு, குடியகல்வு சட்டமுறைமையொன்றைத் தாபிக்கும் நோக்கில் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.