• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார சேவைகள் கட்டண (திருத்த) சட்டமூலம்
- 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வரவுசெலவுத்திட்டங்களின் ஊடாக முன்மொழியப்பட்ட மாற்றங்கள் உள்வாங்கப்படும் விதத்தில் 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைகள் கட்டணச் சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் இசைவாக்கம் வழங்கப்பட்டுள்ளதுமான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.