• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம்
- 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புக்கு அமைவாக தற்போது நடைமுறையிலுள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை எளிதாக்கும் நெகிழ்ச்சிமிக்கதாக்கும் நோக்கில் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உத்தேச புதிய சட்டத்தின் மூலம் விரிவான வரிச்சலுகைகளை வழங்குவதற்குப் பதிலாக வருமான வழிகளுக்குரிய சட்டங்களை விரிவுபடுத்தி வரியினை வியாபிப்பதற்கும் வரி செலுத்துபவரின் பாதுகாப்பினை மேம்படுத்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி நிருவாகப் பணிகளை வினைத்திறனுடன் நடாத்திச் செல்லக்கூடிய விதத்தில் புதிய அதிகாரங்களைச் சேர்ப்பதற்கும் வரி முறையில் குறைபாடுகளுக்கு மாற்றுவழிகளைச் செய்து வரி செலுத்துவதிலிருந்து தவறுவதற்கு எதிராக செயலாற்றுவதற்கும் மிகச் சிறந்த வரிக்கட்டமைப் பொன்றை உருவாக்கி உட்சிக்கலற்ற மூலதத்துவங்களின் மீது வரி நிருவாகத்தை நவீனமயப்படுத்துவதற்கும் மூலதன வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள கருதுகோள் பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு இறைவரி சார்பில் புதிய சட்டத்தினை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.