• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொற்றாத நோய்கள் அதிகரிப்பதற்கு எதிராக போராடுவதற்காக NCD Alliance Lanka நிறுவனத்திற்கு நிதியளித்தல்
- நீரிழிவு, இருதய நோய், புற்று நோய், நாட்பட்ட இருதய நோய், மதுபானம் மற்றும் புகையிலை பாவனைக்கு எதிராக போராடும் பொருட்டு இலங்கை நீரிழிவு சங்கம் இலங்கை இருதய சங்கம், இலங்கை புற்றுநோய் சமூகம், சுவாச நோய்களை தடுப்பதற்கான இலங்கை தேசிய சங்கம் ஆகியன “NCD Alliance Lanka” என்னும் பெயரில் அமைப்பொன்றை தாபித்துக் கொண்டுள்ளன. இந்த அமைப்பு மேற்குறிப்பிட்ட தொற்றாத நோய்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஐந்து வருட காலத்திற்கான திறமுறை திட்டமொன்றுக்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த திறமுறைத் திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்டுள்ள செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவற்காக இலங்கை அரசாங்கத்தினால் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கு வழங்கப்படும் நிதி ஏற்பாடுகளிலிருந்து வருடாந்தம் ஐந்து மில்லியன் ரூபா வீதம் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் ஐந்து வருட காலத்திற்கு “NCD Alliance Lanka” அமைப்புக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.