• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபித்தல்
- தேசிய விஞ்ஞான நிலையமொன்றைத் தாபிப்பதற்காக ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த பிரதேசத்திலிருந்து ஏழு ஏக்கர் விஸ்தீரணமான காணியானது விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கு ஏற்கனவே குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய விஞ்ஞான நிலையம் இலங்கை சார்பிலான புதிய ஆரம்பமாவதோடு, அதன் பணிகள் சருவதேச தரத்திற்கு அமைவான தகைமை கொண்ட நிபுணர்களின் ஒத்தாசையைப் பெற்றுக் கொண்டு, மேற்கொள்வது முக்கியமானதாகும். இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் அலங்காரம், தேசிய விஞ்ஞான நிலையத்தின் நிருமாணிப்பு, தாபிப்பு உட்பட மேற்பார்வை ஆகிய பணிகளுக்கான மதியுரைச் சேவையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் பொருத்தமான முகவராண்மையிடமிருந்து தொழினுட்ப மற்றும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.