• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் சிங்கப்பூர் தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் அதனோடிணைந்த பின்னவல யானைகள் சரணாலயம், ரிதியகம சவாரி பூங்கா அபிவிருத்தி திட்டம் என்பன ஏற்கனவே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதோடு, 2018 ஆம் ஆண்டின் இறுதி வரை உத்தேச கருத்திட்டங்களின் நிருமாணிப்புப் பணிகள் நடைபெறும். இந்த அபிவிருத்தி பணிகளுக்குத் தேவையான தொழினுட்ப அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சருவதேச மட்டத்தில் வளர்ச்சியடைந்த மிருககாட்சி சாலையொன்றுடன் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக உரிய தொழினுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியிலான அறிவு, தேவையான தகவல்களின் பரிமாற்றம், மிருகங்கள் சம்பந்தமாக புதிய அனுபவங்களை பரிமாறிக் கொள்ளல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக ஒத்துழைப்புடன் செயலாற்றும் பொருட்டு சிங்கப்பூர் தேசிய மிருகக்காட்சிசாலையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.