• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்க விஜயத்திற்கு ஒருங்கிணைவாக இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக் கொள்வதற்கும் இருநாடுகளினதும் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் நோக்கிலும் சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கும் ரஷ்ய கூட்டாட்சியின் கலாசார அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.