• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மருந்துப் பொருள் உற்பத்தி தொழிலை அபிவிருத்தி செய்தல்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு பங்களிப்பு நல்கக்கூடிய பிரதான தொழில் ஒன்றாக மருந்து பொருள் உற்பத்தி தொழிலானது இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், உள்நாட்டு மருந்து கேள்வியை நிறைவு செய்வதற்கும் தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்கும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் மீது தங்கியிருப்பதை குறைப்பதற்கும் இயலுமாகும் வகையில் இந்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களின் இயலளவை மேம்படுத்து வதற்கான வசதிகளை வழங்குவது அத்தியாவசியமானதாகும். நாட்டின் மொத்த மருந்து தேவையின் சுமார் 15 சதவீதம் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதோடு, இதனை சுமார் 80 சதவீதம் வரை அதிகரிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கமைவாக நாட்டின் மருந்து பொருள் உற்பத்தி தொழிலை நவீனமயப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ஏற்றுமதி சந்தையில் நுழைவதற்கும் இயலுமாகும் வகையில் போட்டி நிலையை விருத்தி செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் மருந்துப் பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், பொதியிடல் பொருட்கள், இயந்திரசாதனங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மருந்துப் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை நிருமாணிக்கும் போது தேவைப்படும் இயந்திர சாதனங்களை இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகை வழங்குவதற்கும் மருந்துப் பொருள் உற்பத்தி தொழிலுக்கான முதலீடுகளை கவரும் பொருட்டு உத்தேச "உயிரியல் மருத்து வலயம்" (Biomedical Zone) தாபிக்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.