• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான கல், மணல், மண் மற்றும் சரளைக் கற்களைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான வழிமுறை யொன்றை அறிமுகப்படுத்துதல்
- இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பணி களுக்குத் தேவையான கல், மணல், மண் மற்றும் சரளைக் கற்கள் போன்ற மூலப்பொருட்களுக்கு உயர் கேள்வி நிலவுகின்றது. குறித்த மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிலங்களை அகழும்போது ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகளைக் குறைத்துக் கொண்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி நோக்கங் களுக்காக இந்த மூலப் பொருட்கள் வழங்கப்படுவதன் சார்பில் முறையான வழி முறையொன்றை நடைமுறைப்படுத்தும் முக்கியத் தேவை வலியுறுத்தப்பட்டது.

இதற்கமைவாக இலங்கையில் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்களை துரிதமாகவும் ஆகக் குறைந்த செலவிலும் நிறைவேற்றிக் கொள்வதற்கும் சுற்றாடலை பாதுகாப் பதற்கும் பல்வேறுபட்ட முறைக்கேடுகளை இல்லாதொழிப்பதற்கும், வினைத் திறன் மிக்க வழங்கல் முறையொன்றை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மகாவலி அதிகாரசபை மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் முகாமிக் கப்படுகின்ற நிலப் பிரதேசங்களிலிருந்து கணிம பொருட்களை முறையான சுற்றாடல் தாக்கம் பற்றிய மதிப்பீடொன்றின் பின்னர், அகழ்வு செய்தல் மற்றும் அவற்றின் பாவனை தொடர்பில் முறையான வழி முறையொன்றை அறிமுகப் படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.