• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அண்மையில் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள பிராந்தி யங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத் திட்டம்
- கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பிராந்தியங்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகளைக் குறைப்பதற்குமான நோக்கில், வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கிராமிய பாதைகள், மத்திய மற்றும் சிறிய அளவிலான நீர்ப்பாசனங்கள் மற்றும் கிராமிய நீர்வழங்கல் வசதிகளை விருத்தி செய்தல் என்பனவற்றின் ஊடாக குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைநிலையை உயர்த்துவதற்கு இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் மூலம் 12,957 மில்லியன் யப்பான் யென் (அண்ணளவாக 17,369 மில்லியன் ரூபா) கடன் தொகையொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்தக் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.