• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்திற்கும் தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- கடந்த ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகம் இலங்கையின் தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையுடன் இணைந்து வங்காள விரிகுடாத் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இந்துசமுத்திர வலயத்தில் ஆராய்ச்சிகள் பற்றிய சமுத்திரம்சார் விஞ்ஞான ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்துள்ளது. இதற்குரிய ஒத்துழைப்பு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு 2017 ஆம் ஆண்டில் ஆரம்பித்து ஐந்து (05) வருட காலப்பகுதியின் சார்பில் புதிய பல்லாண்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்போந்த நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டு நடவடிக்கையினை முறைப்படுத்தும் நோக்கில் இந்த மாத இறுதியில் அமைச்சரானவர் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்துக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கும் குறித்த பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.