• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள வட்டி மானிய கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- சிறிய அளவிலான கமத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் வர்த்தக மட்ட கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கம்பனிகளுக்கும் சலுகையளித்தல், குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அடங்கலாக பல துறைகளில் 12 சலுகை கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தும் வசதியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சகல துறைகளும் 08 கடன் திட்டங்களின் மூலம் தழுவப்படும் விதத்தில் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக பின்வருமாறு நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கடன் திட்டம் பயன்பெறும் குழுக்கள் உத்தேச கடன் தொகை ரூபா
“ரண் அறுவடை" விவசாயிகள், விவசாய அமைப்புகள், கமத்தொழில் பதனிடல் நிறுவனங்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், கோழி வளர்ப்பாளர்கள், அழகு மீன் வளர்ப்பாளர்கள், மலர்ச் செய்கையாளர்கள் 750 மில்லியன்
“கொவி நவோதா" சிறிய அளவிலான விவசாயிகளும் விவசாய அமைப்புகளும் 500,000/-
“திரி சவிய" கோழி சார்ந்த உற்பத்தி துறையில் ஈடுபடுபவர்கள் 75 மில்லியன்
“ஜய இசுர" கமத்தொழில், கடற்றொழில், கால்நடை வளர்ப்பு, மலர்ச் செய்கை, வீ்ட்டுத் தோட்டம், சிறு பொறியியல் தொழில், அச்சு, சுற்றுலாத் தொழில், தகவல் தொழினுட்ப பிரிவு, உற்பத்தி கைத்தொழில், கைப்பணி மற்றும் தைத்த ஆடை போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் மத்திய அளவிலான தொழில்முயற்சியாளர்கள் 400 மில்லியன் வரை
“ரிய சக்தி" பாடசாலை மாணவர்களை கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 04 மில்லியன்
“சொந்துரு பியச" சுயமாக தங்களுடைய வீடுகளிளை நிருமாணித்துக் கொள்வதற்கு ஆற்றலில்லாத குறைந்த வருமானம் பெரும் மக்கள் 200,000/-
"மெஹெசர" பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் 300,000/- வரை
“ரிவி பல சவி" தங்களுடைய வீட்டுக்கு சூரிய பலகங்களை கொள்வனவு செய்யும் மக்கள் 350,000/-