• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்புத் தொடர்பில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்புத் தொடர்பிலான விருத்தியை நோக்காகக் கொண்டு, இலங்கையின் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும் ரஷ்யாவின் கல்வி மற்றும் விஞ்ஞான அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளவதற்கு இரண்டு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. நிபுணர்களை பரிமாறிக் கொள்ளல், விஞ்ஞான ரீதியிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல் மாநாடுகள் மற்றும் கல்வி சம்மேளனங்களை ஒழுங்கு செய்தல், கூட்டு ஆராய்ச்சி தொழினுட்பக் கல்வி மற்றும் கூட்டு விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம் மற்றும் குழுக்களை உருவாக்குதல் போன்ற துறைகளுக்குரியதாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, 2017 மார்ச் மாதம் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் ரஷ்ய கூட்டாட்சிக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.