• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு பிரதேசத்தின் கழிவுநீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்தல்
- பாரிய கொழும்பு பிரதேசத்தின் கழிவுநீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச வாழ் மக்களுக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம் மிக்க சுற்றாடலொன்றில் வாழக்கூடிய விதத்தில் "பாரிய கொழும்பு குடிநீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி முதலீட்டு கருத்திட்டம் 3” நடைமுறைப்படுத்துவதற்கு 112.83 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன்தொகையொன்று இலங்கை அரசாங்கத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கடன் தொகையிலிருந்து ஒரு பகுதியைப் பயன்படுத்தி கொழும்பு மாநகர சபையின் கிருலப்பனை கழிவுநீர்தேக்க பிரதேசத்துக்கு புதிய வடிகால் முறைமை யொன்றையும், கழிவுநீர் பம்பி நிலையங்களையும் பிரதான குழாய்களையும் நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாட்டின் பிரகாரமும் அனுசரணையான ஆகக்குறைந்த மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள M/s. Larsen Toubro Limited நிறுவனத்துக்கு 7,015.91 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த தொகைக்கு வழங்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.