• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீடு மற்றும் உற்பத்தி ஆற்றல்களை விருத்தி செய்வது தொடர்பில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டில் மாண்புமிகு பிரதம அமைச்சர் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது முதலீடு, பொருளாதாரம் மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பினை நடைமுறைப் படுத்துவது தொடர்பில் விரிவான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை சீன அரசாங்கத்துடன் செய்து கொண்டது. இந்த விரிவான புரிந்துணர்வு உடன்படிக்கையின் குறைநிரப்பாக உற்பத்தி அடிப்படை மற்றும் திறமுறை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு உரியதாக மையப்படுத்திய திறமுறை துறைகளின் பங்குடமையை கட்டியெழுப்பும் நோக்கில் "உற்பத்தி ஆற்றல், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு" பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை இலங்கையுடன் செய்து கொள்வதற்கு மக்கள் சீனக் குடியரசின் தேசிய அபிவிருத்தி, மறுசீரமைப்பு ஆணைக்குழுவினால் (National Development and Reform Commission-NDRC) விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மக்கள் சீனக் குடியரசின் தேசிய அபிவிருத்தி, மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் பிரதம அமைச்சரின் சருவதேச வர்த்தக, கொள்கை அபிவிருத்தி அலுவலகத்திற்கும் இடையில் உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.