• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் செக் குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் வர்த்தக பணிகளுக்கான பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை
- இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தக, பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், இருதரப்பு முதலீடுகளில் விருத்திக்கு வசதிகளை ஏற்பாடு செய்தல், பொருளாதார, முதலீட்டு வாய்ப்புகளை இனங்காணுதல், நெருங்கிய வர்த்தக மற்றும் கைத்தொழிலை மேம்படுத்துதல், இரு நாட்டினதும் தொழில்முயற்சி நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்புக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல், வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கைகள் சம்பந்தமாக இருநாடுகளினதும் தனியார் துறைகளுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வினை உருவாக்குதல், பரஸ்பர அக்கறை செலுத்தும் துறைகளில் ஒத்துழைப்பினை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செக்குடியரசின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கையை செய்து கொள்ளும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.