• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீண்டகால கடற்றொழில் கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டம் என்பவற்றை தயாரிப்பதற்காக நோர்வே அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
- இலங்கை சார்பில் புதிய கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினக் கொள்கையொன்றை தயாரிப்பதற்கு நோர்வே அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நோர்வே அரசாங்கத்தின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கும் இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் இரண்டு (02) உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.