• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மதுவரி அறிவித்தல் இலக்கம் 994 (2016‑12‑20 ஆம் திகதியிடப்பட்டதும் 1998/7ஆம் இலக்கத்தையும் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி)
- மதுவரித் திணைகளத்தினால் 2017 ஆம் ஆண்டுவரை வௌிநாட்டு மதுபானங்களின் விற்பனைக்கான உரிமப்பத்திரங்களை வழங்கும் போது, குறித்த உரிமப்பத்திரத்துடன் அதற்கு மேலதிகமாக வௌிநாட்டு மதுபான நிலையங்கள், வாடிவீடுகள், ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றில் மொத்தமாக மதுபான விற்பனைக்கு இலவசமாக வழங்கப்பட்ட நான்கு வகை மதுபான உரிமப்பத்திரங்கள் சார்பில் 2017‑01‑01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 100,000/- ரூபாவை வருடாந்த உரிமப்பத்திர கட்டணமொன்றாக விதிப்பதற்கும் போத்திலில் இடப்பட்ட கள் விற்பனைக்காக 50,000/- ரூபாவைக் கொண்ட வருடாந்த உரிமப்பத்திர கட்டணமொன்றை விதிப்பதற்கும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 25 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரினால் வௌியிடப்பட்ட கட்டளைகளை உள்ளடக்கிய 994 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ள 2016‑12‑20 ஆம் திகதியிடப்பட்டதும் 1998/7 ஆம் இலக்கத்தையும் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.