• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2021 - ஆரம்ப திட்டங்களைத் தயாரிக்கும் கட்டம்
- இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பானது பத்து வருடங்களுக்கு ஒரு தடவை நடாத்தப்படுகின்றது. அடுத்த சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பானது 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இதற்காக முழுநாட்டையும் தழுவும் விதத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் 2020 ஏப்ரல் மாதம் வரை செய்யப்படுவதோடு, அதற்குத் தேவையான நிதிகளை ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.