• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தாயிரமாம் ஆண்டு சவால்கள் ஒருங்கிணைப்பு கருத்திட்ட பிரிவை தாபித்தல்
- புத்தாயிரமாம் ஆண்டு சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Chllenge Coeporation - MCC) என்னும் போது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் உலகம் முழுவதும் வறுமை நிலையை குறைப்பதற்காக இயங்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் வௌிநாட்டு உதவி முகவராண்மை யொன்றாகும். தெரிவுசெய்யப்படும் நாடுகளில் நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை குறியிலக்காகக் கொண்டு இந்த முகவராண்மையினால் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்பொன்றை இலங்கைக்காக பெற்றுக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக நிலையற்ற கொள்கை, காணி உட்பட போக்குவரத்துக்கான அணுகல், நீர் மற்றும் கழிவுநீர் உட்கட்டமைப்பு வசதிகள், மின்சாரம் மற்றும் கல்வி போன்ற துறைகள் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏதுவாக அமையும் விதத்தில் அபிவிருத்தி செய்வதற்காக 700 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீடொன்றை எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு இந்த முகவராண்மையானது உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப் படுத்துவது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு "புத்தாயிரமாம் ஆண்டு சவால்கள் ஒருங்கிணைப்பு கருத்திட்ட பிரிவொன்றை" பிரதம அமைச்சரின் அலுவலகத்திலுள்ள கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தின் கீழ் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.