• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-03-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராம இராஜ்ய கருதுகோள் பத்திரமும் கட்டமைப்பும்
- பொது மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு நேரடியாகவும் பயனுள்ள வகையிலும் பங்களிப்பு நல்குவதற்கு வாய்ப்பினை வழங்கும் நிறுவன ரீதியிலான கட்டமைப்பொன்றாக செயற்படுதல், சமூக சமத்துவத்தை முன்னிலைப்படுத்தி முழுமையானதும் நிலைபேறுடையதுமான சமூக மொன்றினை நோக்கி செல்வதனை உறுதிப்படுத்துதல், தமது பிரதேசங்களில் அபிவிருத்தி சம்பந்தமான கருத்துகள் மற்றும் முன்னுரிமை பற்றி கலந்துரையாடி பொது மக்களும் அரசாங்கமும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயலாற்றுவதற்கு வாய்ப்பினை உருவாக்கும் களமொன்றாக இருத்தல் என்னும் பிரதான நோக்கத்தினை முன்னிலைப்படுத்தி "கிராம இராஜ்ய எண்ணக்கருவை" நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த துறைசார்ந்த சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலம் "வரைவு கிராம இராஜ்ய கருதுகோள் பத்திரமும் கட்டமைப்பும்" தயாரிக்கப்பட்டுள்ளதோடு, உள்ளக நிருவாகம் மற்றும் அரசாங்க முகாமைத்துவத்திற்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இதன் சார்பில் அதன் அவதானிப்புரைகளைச் சமர்ப்பித்துள்ளது. இதற்கமைவாக, “கிராம இராஜ்ய கருதுகோள் பத்திரமும் கட்டமைப்பும்" என்பதை பொது மக்களின் கருத்துக்காக பிரதம அமைச்சரின் அலுவலகத்தினது உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வௌியிடும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.