• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலக (தாபித்தல், நிருவாகம் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல்) சட்டத்தை திருத்துதல்
- 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலக (தாபித்தல், நிருவாகம் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல்) சட்டமானது, பாராளுமன்றத்தினால் 2016 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு எவரேனும் ஆள் ஒருவருடன் அமைப்பொன்றுடன் உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்கு இந்த அலுவலகத்திற்கு அதிகாரம் கையளிக்கப்பட்ட மேற்போந்த சட்டத்தின் 11 ஆம் பிரிவின் (அ) ஆம் பந்தியை நீக்கி இந்த சட்டத்தைத் திருத்துவதற்கு சட்டவரையினரினால் வரையப்பட்ட காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலக (தாபித்தல், நிருவாகம் மற்றும் பணிகளை நிறைவேற்றுதல்) (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும். அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.