• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹெடஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டம் சார்பில் விருப்பு தெரிவிப்புகளையும் கருத்திட்ட பிரேரிப்புகளையும் கோருதல்
- உத்தேச ஹெடஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் கீழ் ஹெடஓயாவிற்குக் குறுக்காக 147 மில்லியன் கொள்ளளவைக் கொண்ட நீர்த்தேக்கம், நீர்த்தேக்கத்திற்கு 6.4 கிலோ மீற்றருக்குக் கீழே ஹெடஓயாவிற்குக் குறுக்காக திசைதிருப்பும் அணை, 16 கிலோ மீற்றர் நீளம் கொண்ட தெற்குக்கரை மற்றும் 13.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வடக்குக்கரை கால்வாய் என்பன நிருமாணிக்கப்படவுள்ளன. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியதகவாய் வின்படி இந்த கருத்திட்டத்தின் மூலம் ஹெடஓயா, விலஓயா மற்றும் கரந்தஓயா தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள புதிதாக பயிர்செய்யப்படும் காணிகள் மற்றும் பழைய 5,308 ஹெக்டயார் காணிகள் ஆகியவற்றுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கும் பொத்துவில், லாகுகல மற்றும் பானம ஆகிய பிரதேசங்களில் குடிநீர் மற்றும் வீட்டு நீர் தேவைகளுக்கு வருடாந்தம் 5 மில்லியன் கனமீற்றர் நீர் வசதிகளை வழங்குவதற்கும் முடியுமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, வௌிநாட்டு நிதிகளைப் பயன்படுத்தி இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய பொருத்தமான நிருமாணிப்பு கம்பனியொன்றை இனங்காணும் நோக்கில் விருப்பத் தெரிவிப்புகளையும் கருத்திட்டப் பிரேரிப்புகளையும் கோரும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.