• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யான்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் இடதுகரை பிரதான கால்வாயை வடிவமைத்து நிருமாணித்தல்
- யான்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டம் நீர்வழங்கல் அபிவிருத்தியின் பொருட்டு இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அளவிலான கருத்திட்டங்களி லொன்றாகும். இதன்மூலம் அநுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு பொருளாதார நலன்கள் பல உரியதாகும். இந்த நீர்த்தேக்கத்தின் இடதுகரையின் பிரதான கால்வாய் மூலம் பதவிய திட்டம் மற்றும் யான்ஓயா அணைக்கட்டுத்திட்டம் என்பவற்றின் கீழ் தற்போது நிலவும் கடும் நீர் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்துள்ள காணிகள் அடங்கலாக 4,190 ஹெக்டயார் கொண்ட பயிர்ச்செய்கைப் பிரதேசங்களுக்கு நீர் வழங்கப்படும். மொத்த நீளம் சுமார் 18கிலோ மீற்றர்கள் கொண்ட இந்த இடதுகரை பிரதான கால்வாய் நிருமாணிக்கப்படும் பிரதேசத்தின் அமைவிடத்திற்கு அமைவாக இதனை முழுமையாக கொங்கிறீட் இடும் அத்துடன் 5 கிலோ மீற்றர் நீளமான நிலக்கீழ் வழியொன்று அடங்கலாக சிக்கலான நிருமாணிப்புகள் பல நிருமாணிக்கப்படவுள்ளன.

ஆதலால், குறித்த இடதுகரை கால்வாயை உயர் தரம் வாய்ந்ததாக வடிவமைத்து நிருமாணிப்பதற்கு தொழினுட்ப ரீதியில் பூரணமான சர்வதேச மட்டத்திலான ஒப்பந்தக்காரர்களின் ஒத்தாசையைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானதென அவதானிக்கப்பட்டிருந்தாலும் அதற்காக திறந்த சர்வதேச போட்டி கொள்வனவு முறையைப் பின்பற்றுவதற்கு செல்லும் காலத்தை கவனத்திற் கொள்ளும் போது பிரதேச மக்களுக்கு நீர் வழங்கலானது எதிர்பார்க்கப்பட்ட காலத்தினைவிட சுமார் ஒரு (01) வருடம் தாமதமாகலாம். ஆதலால், யான்ஓயா நீர்த்தேக்கத்தை வடிவமைத்து நிருமாணிக்கும் பிரதான ஒப்பந்தக்காரரான China CAMCE Engineering நிறுவனத்தின் சேவையை இடதுகரை கால்வாயை வடிவமைத்து நிருமாணிக்கும் பணிக்காகவும் பெற்றுக் கொள்வது தொழினுட்ப மற்றும் பொருளாதார ரீதியில் மிகப் பயனுள்ளதும் நடைமுறைச் சாத்தியமானதுமென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, யான்ஓயா நீர்த்தேக்க இடதுகரை பிரதான கால்வாயை நிருமாணிப்பதற்காக பொறியியல், கொள்வனவு மற்றும் நிருமாணிப்பு என்பவற்றை ஒப்பந்த அடிப்படையில் 24 மாத காலப்பகுதிக்குள் வடிவமைத்து நிருமாணிக்கும் பொருட்டு China CAMCE Engineering நிறுவனத்திடமிருந்து தொழினுட்ப மற்றும் நிதிசார் பிரேரிப்புகளை கோரும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.