• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டுக்களின் போது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் மற்றும் முறைகளை வௌிப்படுத்துதல்
- உலக தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் பற்றிய சட்டக்கோவையின் பிரகாரம் விளையாட்டுகளின் போது தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் மற்றும் முறைகள் உள்ளடக்கப்பட்ட பட்டியல் - 2017 வௌிப்படுத்தி, 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களின் போது ஊக்க மருந்து பாவனைக்கெதிரான சமவாய சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2017‑02‑14 ஆம் திகதியிடப்பட்டதும் 2006/15 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து (தடைசெய்யப்பட்ட பட்டியல்) கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.