• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2012 நவெம்பர் மாதம் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மரணித்த அத்துடன் காயமடைந்தவர்கள் சார்பில் இழப்பீடு வழங்குதல்
- 2012 நவெம்பர் மாதம் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பபட்ட மோதல் காரணமாக 27 சிறைக் கைதிகள் மரணித்ததோடு, சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரும் 20 சிறைச்சாலைக் கைதிகளும் காயமடைந்தனர். இந்த நிகழ்வு சம்பந்தமாக புலனாய்வு செய்து சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு இந்தக் குழுவின் அறிக்கை தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. மரணித்த 27 பேர்களில் 16 பேருக்கு இழப்பீடு வழங்குமாறும் மீதி 11 பேரும் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சிக்கையில் மரணித்துள்ளமையினால் அவர்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டியதில்லையெனவும் இந்த சம்பவத்தின் போது காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகத்தருக்கும் 20 சிறைச்சாலைக் கைதிகளுக்கும் இழப்பீடு வழங்குமாறும் இந்த குழு அறிக்கையின் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2012‑11‑09 ஆம் திகதியன்று வெலிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்த மோதல் காரணமாக மரணித்த 16 சிறைக் கைதிகளுக்கு ஒருவருக்கு 2,000,000/= ரூபா வீதம் இழப்பீடு செலுத்துவதற்கும் இந்த மோதலில் காயமடைந்வர்களுக்கு ஒருவருக்கு 500,000/= ரூபா வீதம் இழப்பீடு செலுத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.