• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு பாதுகாப்பிற்காக தாழ்நில ஈரவலயத்திலுள்ள தரிசு வயல்களில் மீண்டும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளல்
- தற்போது அடிக்கடி நிகழும் காலநிலை மாற்றம் காரணமாக கமத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரதிகூலமான பாதிப்பினைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நிலைபேறுடைய விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு நீண்டகால உணவுப் பாதுகாப்பின்பால் கவனம் செலுத்துவது அத்தியாவசிய விடயமொன்றாக தெரியவந்துள்ளது. இதன்போது கைவிடப்பட்டுள்ள வயல்களை அபிவிருத்தி செய்து மீள பயிர்செய்வது முக்கியமானதாகும். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அடங்கலாக நாட்டின் தாழ்நில ஈரவலயத்தில் சுமார் 26,122 ஹெக்டயார் தரிசு வயல்கள் உள்ளனவென கமநல அபிவிருத்தித் திணைக்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளதோடு, கமத்தொழில் அமைச்சு, மாகாண கமத்தொழில் அமைச்சுக்கள், கமத்தொழில் திணைக்களம். மாகாண கமத்தொழில் திணைக்களங்கள். கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் போன்ற நிறுவனங்கள் இணைந்து இம்முறை சிறுபோகத்தில் குறித்த நிலப்பிரதேசத்தில் நெல், மரக்கறி, கிழங்குவகைகள் போன்றவற்றை செய்கைபண்ணும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அணைக்கட்டுகள், கால்வாய் முறைமைகள், நிலத்தைப் பதனிடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, 17,000 ஹெக்டயார் தரிசு வயல்களை அபிவிருத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கும் 17,000 ஹெக்டயார் மற்றும் பயிர்செய்யப்படாத 9,000 விவசாய நிலங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும் இதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதற்குமாக கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.