• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 சிறுபோகத்திலும் 2017/2018 பெரும்போகத்திலும் தேவைப்படும் விதை நெல் பெற்றுக் கொள்ளல்
- 2016/2017 பெரும்போகத்தில் மழை தாமதமடைந்ததனாலும் மழைவீழ்ச்சி போதுமான அளவு கிடைக்காததனாலும் நாட்டின் சகல பிரதேசங்களிலும் நெல் செய்கைபண்ணப்பட்டுள்ள பரப்பளவு பெருமளவில் குறைவடைந்துள்ளது. அதலால், எதிர்பார்க்கப்படும் அறுவடையிலும் அதேபோன்று விதைநெல் உற்பத்தியிலும் கணிசமான பின்னடைவு ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, 2017 சிறுபோகத்திலும் 2017/2018 பெரும்போகத்திலும் ஏற்படக்கூடிய விதை நெல்லுக்கான பற்றாக்குறைக்கு முகம்கொடுக்க வேண்டிய அவதானநிலை எழுந்துள்ளது. நாட்டில் உணவு விநியோகத்தை உறுதி செய்து இந்த நிலைமைக்கு முகம்கொடுப்பதற்கு 2017 சிறுபோகத்திற்கும் 2017/2018 பெரும்போகத்திற்கும் தேவையான விதை நெல்லினை கமத்தொழில் திணைக்களத்தில் உற்பத்தி செய்வதன் மூலமும் நெல் செய்கைபண்ணிய விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்தும் சலுகை விலைக்கு விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.