• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹா, பஹலயாகொட பிரதேசத்தில் புதிய தொழில் பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
- கல்வி பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றி, வருடாந்தம் பாடசாலைகளிலிருந்து விலகும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 17,500 ஆகவிருந்தாலும் இந்த மாவட்டத்திலுள்ள தொழில்பயிற்சி நிலையங்களுக்கு இணைத்துக் கொள்ள முடியுமாவது ஆகக்கூடுதலாக சுமார் 7,300 மாணவர்களாவர். இதிலிருந்து தொழில்பயிற்சி அதிகாரசபைக்குச் சொந்தமான பயற்சி நிலையங்களுக்கு இணைத்துக் கொள்ள முடியுமாவது 960 மாணவர்களாவர். தொழினுட்பவிய லாளர்களுக்கு தொழில் சந்தையில் நிலவும் கேள்வியினைக் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளும் போது தொழில்பயிற்சி அதிகாரசபைக்குச் சொந்தமான புதிய தொழில்பயிற்சி நிலையமொன்றை கம்பஹா மாவட்டத்தில் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கம்பஹா, பஹலயாகொட பிரதேசத்தில் புதிய தொழில் பயிற்சி நிலையமொன்றைத் தாபிக்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.