• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூரிய பலகங்களின் முன்மாதிரி உற்பத்திக்கான வசதிகளை வழங்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 2020 ஆண்டளவில் இந்த நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியிலிருந்து 20சதவீதம் மரபுவழி சாராத புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களிலிருந்து பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கமைவாக துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் சூரியசக்தி கைத்தொழிலுக்கு ஒத்தாசை நல்கும் நோக்கில், சூரிய பலகங்களின் முன்மாதிரி உற்பத்திக்கான கற்கை பயிற்சி கருத்திட்டமொன்றுக்கு 2016‑04‑06 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, அதன் ஆரம்ப பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் களனி, யாழ்ப்பாணம், றுகுணு மற்றும் பேராதனை ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களினதும் பேராசிரியர்கள் நால்வரினதும் தேசிய ஆரம்பக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவரினதும் நேரடி பங்குபற்றுதலின் கீழ் இளைஞர்களுக்கு பயிற்சியளித்தல் உட்பட கருத்திட்டம் சார்ந்த ஏனைய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்குத் தேவையான உபனகரணங்கள், இரசாயன பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக 80 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.